கொரோனா வைரஸை கொல்லக்கூடிய காற்று வடிகட்டி.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் உலக அளவில், 12,625,860 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 562,820 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவை பொறுத்தவரையில், இந்த வைரஸ் பாதிப்பால், 822,603 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 22,144 பேர் உயிரிழந்துள்ளனர். ஈலையில், இந்த வைரஸை அழிப்பதற்கு உலக நாடுகள் கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.
இதனையடுத்து, கொரோனா வைரஸைப் “பிடிக்கவும் கொல்லவும் கூடிய ” காற்று வடிகட்டியை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதுகுறித்து, அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வு இணை ஆசிரியர் ஜிஃபெங் ரென் அவர்கள் கூறுகையில், இந்த வடிகட்டி விமான நிலையங்களிலும், விமானங்களிலும், அலுவலக கட்டிடங்கள், பள்ளிகள் மற்றும் பயணக் கப்பல்களில் கோவிட் -19 பரவுவதைத் தடுக்க பயனுள்ளதாக இருக்கும்” என்று கூறினார்.
இந்த வைரசால் 70 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலையைத் தக்கவைக்க முடியாது என்று ஆராய்ச்சி குழுவுக்குத் தெரியும், எனவே ஆராய்ச்சியாளர்கள் சூடான வடிகட்டியைப் பயன்படுத்த முடிவு செய்தனர். வடிகட்டி வெப்பநிலையை மிகவும் வெப்பமாக்குவதன் மூலம் – சுமார் 200 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையில், அவர்களால் வைரஸை கிட்டத்தட்ட உடனடியாக கொல்ல முடிந்தது.
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக…