எல்லைகள் திறக்க தாமதப்படுவதால், மீண்டும் சவூதி அரேபியாவில் விமான தடை!
சவூதி அரேபியாவில் இயங்கி வந்த விமானங்கள் எல்லைகளை திறக்க தாமதப்படுத்துவதால் மீண்டும் இயக்கத்தை நிறுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல பகுதிகளிலுமுள்ள கோடிக்கணக்கான மக்கள் பாதிப்புக்குள்ளாக்கியதை அடுத்து, விமானங்கள் போக்குவரத்துகள், தொழிற்சாலைகள் மற்றும் அணைத்து வணிக வளாகங்களும் மூடப்பட்ட நிலையில் தான் இருந்தது. சில மாதங்களாக தான் கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளதையும், மக்களின் நிலையையும் நினைத்து அரசாங்கம் சில தளர்வுகளை அறிவித்து வருகிறது.
அதிலொன்றாக விமானங்கள் இயங்க அனுமதி கொடுக்கப்பட்டதை அடுத்து சவூதி அரேபியாவிலும் விமானங்கள் தற்பொழுது தான் இயங்க துவங்கியது. ஆனால், மீண்டும் புதியவகை கொரோனா பரவல் காரணமாக சில இடங்களின் எல்லைகள் அடைக்கப்பட்ட நிலையில் இருப்பதாலும், திறக்க தாமதிக்கப்படுவதாலும், மீண்டும் விமானங்கள் இயங்குவதற்கு தடை அறிவிக்கப்பட்டுள்ளது. பயணம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதை விட அனைவரும் தடுப்பூசி நிச்சயம் எடுத்துக்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆனால், தடுப்பூசிகள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதும் விமான சேவை தடை செய்யப்பட்டதற்கு மற்றொரு காரணம் என கூறப்படுகிறது.