செப்.28 அன்று அதிமுக செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என்று ஓபிஎஸ் ஈபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர்.
சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல், சசிகலா விடுதலை, மாவட்டங்கள் பிரிப்பு, பாஜகவுடனான கூட்டணிப் பிரச்சினை, முதல்வர் வேட்பாளர் என்ற அடுக்கடுக்கான சர்ச்சை என்று அதிமுகவில் பல பிரச்சினைகள் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் எழுப்பிய நிலையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் உள்ளிட்ட தலைமைச் செயற்குழு உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதன் பின்னர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில், தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை (18.9.2020 – வெள்ளிக்கிழமை) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மூத்த தலைமைக் கட்சி நிர்வாகிகள், மூத்த அமைச்சர்கள், சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்நிலையில் அதிமுக செயற்குழுக் கூட்டம் வரும் செப்.,28 காலை 9.45 மணி அளவில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் கூட்டம் நடைபெறும் என்றும் கூட்டத்திற்கான அழைப்பிதழ் செயற்குழு உறுப்பினர்களுக்குத் தனித்தனியாக அனுப்பி வைக்கப்படும். அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளவேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதிமுக அரசியலில் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு இக்கூட்டம் முக்கியமானது என்றும் கட்சியில் எதிர்காலம் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் நோக்குகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…