அதிமுக எம்.பி. சி.வி.சண்முகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க மறுத்த தமிழக அரசு உத்தரவு ரத்து..!
சி.வி.சண்முகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க மறுத்த தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்றம்.
அதிமுக .எம்.பி சி.வி.சண்முகத்திற்கு 2006-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த மனுவில், பாதுகாப்பை விலக்கியதற்கான காரணத்தை தெரிவிக்க கோரியும், பாதுகாப்பு வழங்கக் கோரியும், உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும்போது காவல்துறை பாதுகாப்பு பெற முடியும் என்கிற உரிமை மறுக்கப்படுகிறது என்றும் அந்த மனுவில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் காவல்துறை தரப்பில், பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டதில் உள்நோக்கம் எதுவுமில்லை.
பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டதில் உள்நோக்கம் எதுவுமில்லை
பாதுகாப்பு ஆய்வு குழு அளித்த பரிந்துரை அடிப்படையில் வாபஸ் தரப்பட்டது என காவல்துறை தரப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிமுக எம்பி சி.வி.சண்முகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க மறுத்த தமிழக அரசின் உத்தரவை உயர்நீதிமன்ற ரத்து செய்து, இந்த வழக்கை பரிசீலித்து எட்டு வாரத்துக்குள் முடிவெடுக்க தமிழக டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.