அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் – வரும் 10-ஆம் தேதி ஆலோசனை..!
வரும் 10-ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து ஆலோசனை.
அதிமுகவில் ஜூலை 11-ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, ஜூலை 11-ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து ஆலோசனை
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பு விரைவில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு நடைபெறும் என தெரிவித்துள்ளது. இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து அதிக சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.
அதன்படி, வரும் 10-ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில், இந்த தேர்தல் குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.