அதிமுக+பாஜக கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி….கே.எஸ் அழகிரி கருத்து…!!
- அதிமுக+பாஜக கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத மற்றும் கொள்கையற்ற கூட்டணி இந்திய நாடு மற்றும் தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் .
- அதிமுக + பாஜக கூட்டணியில் தாமாக இணைந்தால் அது மூப்பனாரின் நிலைப்பாட்டிற்கு எதிரானது என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருகையில் மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக_வும் , காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றது.மாநிலத்துக்கு மாநிலம் மாநில கட்சிகளுடன் கூட்டணி குறித்த வியூகங்களை வகுத்து வருகின்றனர்.
தமிழகத்தில் திமுக + காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்க அதிமுக தலைமையில் பாஜக + பாமக இணைந்துள்ளனர்.இவர்களுக்கான தொகுதி பங்கிடும் இறுதி செய்யப்பட்டு விட்டது.இந்நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் எவ்வளவு தொகுதிகள் கேட்கும் என்று நேற்றைய தினம் ராகுல் காந்தியுடன் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்நிலையில் டெல்லியில் இருந்து திரும்பிய தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ் அழகிரி செய்தியாளர்களிடம் கூறுகையில் , அதிமுக+பாஜக கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத மற்றும் கொள்கையற்ற கூட்டணி இந்திய நாடு மற்றும் தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அமைத்த கூட்டணியை மக்கள் நிராகரிப்பார்கள். மூப்பனார் பாரதீய ஜனதா கட்சியில் இணைய கூடாது என்கின்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். அதிமுக + பாஜக கூட்டணியில் தாமாக இணைந்தால் அது மூப்பனாரின் நிலைப்பாட்டிற்கு எதிரானதாக இருக்கும்.