ஆ ஹா என அழகு.! மயில் போன்ற தோகை வைத்த அரிய வகை பொன்னிற பீசன்ட் பறவை.!
- மயில் போன்ற தோகை கொண்ட அரிய வகை பறவைகள் சீனாவை சுற்றி வருகிறது.
- சீனர்களால் நெருப்பு பீனிக்ஸ் என்றும், சீன பீசன்ட் பறவை என்றும் இந்த பறவைகளை அழைக்கப்படுகின்றன.
சீனாவின் ஹெனான் மாகாணத்தில் மயில் போன்ற தோகை கொண்ட அரிய வகை பொன்னிற பீசன்ட் (pheasant) பறவைகள் சுற்றித் திரியும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
நெருப்பு பீனிக்ஸ் என்றும், சீன பீசன்ட் பறவை என்றும் இந்த பறவைகளை அழைக்கப்படுகின்றன. இந்த வகையான பறவைகள் எண்ணிக்கையில் மிகவும் குறைவாக இருப்பதால், அவற்றை சீனா அரிய வகை உயிரினங்களில் ஒன்றாக அறிவித்துள்ளது.
அந்த பறவைகள், ஹெனான் மாகாணத்தில் சுற்றித் திரியும் காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில் பனிப்பபொழிவின் இடையே இரை தேடுவதும், மரத்துக்கு மரம் பறந்து செல்வது போன்றும் காட்சிகள் உள்ளன.இது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பதால் அதனை பார்த்து அங்குள்ள மக்கள் ரசித்து வருகின்றனர்.