மீண்டும் மீண்டுமா .., விமல் மீது மற்றொரு தயாரிப்பாளர் புகார்..!
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் நடிகர் விமல் மீது ஏற்கனவே தயாரிப்பாளர் கோபி என்பவர் மன்னார் வகையறா படத்துக்காக 5 கோடி ரூபாய் வாங்கிவிட்டு ஏமாற்றி விட்டதாக புகார் தெரிவித்ததார். ஆனால், இந்த குற்றசாட்டை நடிகர் விமல் முற்றிலுமாக மறுத்த நிலையில் தற்போது அடுத்ததாக தயாரிப்பாளர் சிங்கார வேலன் என்பவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் விமல் மீது புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில் 2016-ம் ஆண்டு தனக்கு விமல் அறிமுகமாகியதாகவும், அதன் பின்பாக மன்னர் வகையறா படத்தை திருப்பூரை சேர்ந்த கணேசன் என்பவர் மூலமாக தயாரிக்க உள்ளதாகவும் அதற்காக பண உதவி செய்யுமாறும் வந்ததாகவும் அப்பொழுதுதான் கோபி எனும் தனது நண்பரிடம் ஐந்து கோடி ரூபாயை வாங்கிக் கொடுத்ததாகவும், அதன் பின் மீண்டும் தன்னிடம் வந்த விமல் களவாணி 2 படத்தின் தயாரிப்பு செலவுகளுக்காக 1.50 கோடி ரூபாய் பணம் வேண்டும் என்று கேட்டதாகவும் தான் அதை கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் அந்த படத்திற்கான தயாரிப்பு பணி அவர் தொடராததால், பட வெளியீட்டுக்கு முன்பாகவே பணத்தை கொடுத்து விடுகிறேன் என விமல் கூறியிருந்தார். அப்படியும் கொடுக்காததால் அரசியல் பிரபலத்தை அழைத்து எனக்கு தரவேண்டிய பணத்தைத் தந்து விடுவதாகவும், இருவரும் ஆவணத்தில் கையெழுத்திட்டதாகவும், ஆனால் இரண்டு வருடங்களாகியும் இன்னும் விமல் அந்த 1.50 கோடி ரூபாயை தராமல் மோசடி செய்துவிட்டார் என அவர் புகார் அளித்துள்ளார் .