ஜப்பானின் அடுத்த பிரதமராகிறார் ஃபுமியோ கிஷிடா…!

Default Image

ஜப்பானில் ஆளும் கட்சி தலைமைத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு,ஜப்பானின் அடுத்த பிரதமராக ஃபுமியோ கிஷிடா பதவியேற்கிறார்.

ஜப்பானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஃபுமியோ கிஷிடா ஆளும் கட்சி தலைமை தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த பிரதமராக பதவியேற்க உள்ளார்.அதன்படி,கிஷிடா திங்களன்று ஜப்பான் பாராளுமன்றத்தில் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

கடந்த செப்டம்பரில் பதவியேற்று ஒரு வருடம் மட்டுமே பணியாற்றிய பின்னர் பதவி விலகும் கட்சித் தலைவர் பிரதமர் யோஷிஹிட் சுகாவை இந்த வெற்றியின் மூலம் கிஷிடா மாற்றுகிறார்.

இத்தேர்தலில்,கோனோ என்பவரும், கிஷிடாவும் முதல் வாக்கு எண்ணிக்கையில் கிட்டத்தட்ட சமநிலையில் இருந்தபோதிலும் இறுதியில், கிஷிடா 257 வாக்குகளைப் பெற்றார், கோனோ 170 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார்.

எல்டிபி கட்சி, 1955 முதல் சுமார் நான்கு வருடங்கள் தவிர மற்ற அனைத்திலும் ஆட்சியில் உள்ளது.பாராளுமன்றத்தில் எல்டிபியின் பெரும்பான்மையைக் கருத்தில் கொண்டு, திரு கிஷிதாவின் பிரதமர் பதவி உறுதியானது.அடுத்த பிரதமராகும் கிஷிடா வரும் வாரங்களுக்குள் LDP கட்சியை அடுத்து நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கு வழிநடத்த வேண்டும், மேலும் குறைந்து வரும் மக்கள் தொகை போன்ற நீண்டகால பிரச்சினைகளை கையாள்வதற்கான கொள்கைகளை வகுக்க வேண்டும்.டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை மக்கள் எதிர்ப்பையும் மீறி நடத்தியதால் எல்டிபி கட்சி பிரபலமடைந்தது.

ஃபுமியோ கிஷிடா  2012 முதல் 2017 வரை ஜப்பானின் வெளியுறவு அமைச்சராக பணியாற்றினார்.மேலும்,அவர் LDP இன் கொள்கை ஆராய்ச்சி கவுன்சிலின் தலைவராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்