விக்ரம் பிரபுவை அடுத்து சிவாஜி கணேசன் குடும்பத்திலிருந்து ஹீரோவாக அறிமுகமாகும் இளம் வாரிசு .!

Published by
பால முருகன்

நடிகர் சிவாஜி கணேசனின் முத்த மகனின் மகனான தர்ஷன் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகும் படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவின் நடிப்பின் நாயகனாக பலரது மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.இவர் தனது 74ம் வயதில் கடந்த 2001-ம் ஆண்டு காலமானதை தொடர்ந்து இவரது இளைய மகனான பிரபு 90 மற்றும் 80ஸ்-களில் சினிமாவில் நடித்து பெண்களின் காதல் மன்னனாக திகழ்ந்தார் .அதே போன்று அவரது மூத்த மகன் தயாரிப்பாளர் மட்டுமின்றி ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களை தொடர்ந்து சிவாஜி கணேசனின் பேரன்களான துஷ்யத், விக்ரம் பிரபு, சிவகுமார் ஆகியோரும் சினிமாவில் அறிமுகமாகி தற்போது அதில் பிரபுவின் மகனான விக்ரம் பிரபு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.இவர்களை தொடர்ந்து தற்போது சிவாஜி கணேசனின் முத்த மகனின் மகனான தர்ஷன் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இவருக்கு நடிப்பின் மீது ஆர்வம் இருந்ததாகவும் ,எனவே சுமார் மூன்று வருடங்களுக்கு மேலாக சண்டை பயிற்சி, மேடை நாடகம், நடனம் போன்றவற்றை கற்று தேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.இவர் நாயகனாக அறிமுகமாகும் படத்தை தேசிய விருது வென்ற இயக்குனர் சீனு ராமசாமி இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

‘வீறுகொண்ட வீரர்களாக குரல் கொடுத்தனர்’.. திமுக எம்.பி.க்களுக்கு ஸ்டாலின் பாராட்டு.!

‘வீறுகொண்ட வீரர்களாக குரல் கொடுத்தனர்’.. திமுக எம்.பி.க்களுக்கு ஸ்டாலின் பாராட்டு.!

சென்னை: இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கி, நேற்றைய தினம் முடிவடைந்தது. இந்த…

26 minutes ago

மத்திய அரசுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்!

சென்னை : ஒருபக்கம் அரசியல் சட்டத்துக்கு விழா மறுபுறம் அம்பேத்கருக்கு அவதூறு என்பதே பாஜகவின் பசப்பு அரசியல் என விமர்சித்தும்,…

1 hour ago

2 நாட்கள் அரசு முறை பயணமாக குவைத் நாட்டிற்கு புறப்பட்டார் பிரதமர் மோடி!

டெல்லி: பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று குவைத் புறப்பட்டுச் சென்றார். அங்கு, பயான் அரண்மனையில் அவரை தங்கவைத்து…

1 hour ago

கோயில் உண்டியலில் விழுந்த ஐபோன்! திருப்பி வழங்கப்படுமா? அமைச்சர் சேகர்பாபு விளக்கம்!

திருப்போரூர் :செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் கந்தசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த அக்டோபர் மாதம் சென்னையை சேர்ந்த…

2 hours ago

வீட்டுக்கு வந்த பார்சலில் ஆண் சடலம் – பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி.!

ஆந்திரா: ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் யண்டகண்டி என்ற பகுதியில் வசிக்கும் துளசி என்ற பெண்ணின் வீட்டிற்கு வந்த…

2 hours ago

புஷ்பா 2 ஓடிடி ரிலீஸ் எப்போது? மௌனம் கலைத்த தயாரிப்பு நிறுவனம்!

சென்னை : வந்துச்சே வசூல் மழை தான்...வந்துச்சே வசூல் மழை தான்... என்கிற அளவுக்கு புஷ்பா 2 திரைப்படத்தின் வசூலானது…

3 hours ago