விஜய் ஆண்டனியை தொடர்ந்து நடிகர், நடிகைகள் எடுத்த அதிரடி முடிவு.!
ரபல நடிகையான டாப்ஸி, தயாரிப்பாளர்களின் நலனை கருத்தில் கொண்டு தனது சம்பளத்தை குறைக்க தயாராக உள்ளராம்.
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல் வேலைநிறுத்தமும் செய்யப்பட்டுள்ளது. இதனால் பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஹரிஷ் கல்யாண், விஜய் ஆண்டனி, ஆர்த்தி, உதயா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் தங்களது சம்பளத்தை குறைப்பதாக கூறி முன் வந்தனர் . இதனால் தயாரிப்பாளர்கள் சிறிது மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்த நிலையில் தற்போது பிரபல நடிகையான டாப்ஸி, தயாரிப்பாளர்களின் நலனை கருத்தில் கொண்டு தனது சம்பளத்தை குறைக்க தயாராக உள்ளதாகவும், சினிமாத்துறை சகஜ நிலைக்கு திரும்பும்வரை சம்பளத்தை குறைப்பதை தவிர்க்க முடியாது என்றும் கூறியுள்ளார். மேலும் கபடதாரி படத்தில் நடிக்கும் நடிகர் நாசர் தனது சம்பளத்தில் 15 சதவீதத்தை குறைத்து உதவியுள்ளார்.