பேச்சுவார்த்தை முடிந்தவுடன் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் செயின்ட் ரெஜிஸ் ஹோட்டலுக்கு சென்றார்!

Default Image

அமெரிக்கா மற்றும் வடகொரியா அதிபர்கள் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு உலகமே ஆவலோடு உற்று நோக்கி காத்திருந்த நிலையில் நடைபெற்றுள்ளது..ஞாயிற்றுக்கிழமை பகலில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சிங்கப்பூர் வந்தடைந்தார். அதேநாள் இரவு அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் சிங்கப்பூர் வந்து சேர்ந்தார்.

இருவரும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சிங்கப்பூரில் வெவ்வேறு இடங்களில் தங்கியிருந்தனர். இவர்களது சந்திப்பிற்காக, சென்டோசா தீவு மிகுந்த நேர்த்தியுடன் தயாரானது. இதனைத் தொடர்ந்து, இன்று காலை தாங்கள் தங்கியிருந்த ஹோட்டல்களில் இருந்து, கிம் ஜாங் உன்னும், டொனால்டு டிரம்பும், சென்டோசா தீவு நோக்கி பயணமாகினர். முதலில், பலத்த பாதுகாப்புடன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சென்டோசா தீவை வந்தடைந்தார். பாதுகாப்பு காரணங்களுக்கான, எந்த காரில் டிரம்ப் செல்கிறார் என்பது தெரியாத இருப்பதற்காக, ஒரே மாதிரியான ஒன்றுக்கும் மேற்பட்ட கார்கள் அணிவகுத்தன.

இதேபோல், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னும், தான் தங்கியிருந்த இடத்தில் இருந்து சென்டோசா தீவிற்கு, பலத்த பாதுகாப்புடன், ஏராளமான கார்கள் அணிவகுக்க, பயணமானார்.

இருநாட்டு அதிபர்களும் சென்டோசா தீவை வந்தடைந்த நிலையில், அங்குள்ள கேபெல்லா ஓட்டலில், இந்திய நேரப்படி காலை 6.30 மணியளவில் பேச்சுவார்த்தை தொடங்கியது. அனைத்து நாட்டு தொலைக்காட்சிகளும், இந்த சந்திப்பை நேரலையில் தொகுத்து வழங்கின. முதலில், இரண்டு வெவ்வெறு அறைகளிலிருந்து வெளிப்பட்ட இருவரும், நேர்த்தியாக வைக்கப்பட்ட இரண்டு நாட்டு கொடிகள் முன்னிலையில், பரஸ்பரம் கைகுலுக்கிய வண்ணம் போஸ் கொடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து, இருவரும் செய்தியாளர்களை சந்திக்கும் வண்ணம், பிரதான பகுதியிலிருந்து, அதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறைக்கு, அளவளாவியபடியே நடந்து சென்றனர். அங்கு ஒரே இருக்கையில் அமர்ந்து, பன்னாட்டுச் செய்தியாளர்கள் சந்திப்பை நிகழ்த்தினர்..

அப்போது பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரியா அதிபருடனான இன்றைய பேச்சுவார்த்தையில், தமக்கு மிகுந்த நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்தார். கிம் ஜோங் உன்னுடனான சந்திப்பு என்பது, அமெரிக்க வரலாற்றில் மாபெரும் வெற்றி என்று வர்ணித்தார்.

அணுஆயுத ஒழிப்பு விவகாரத்தில் வடகொரியாவுடன் அமெரிக்கா இணைந்து செயல்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுடனான பேச்சுவார்த்தை மிகவும் நன்றாக அமைந்தது என்றும் கூறியுள்ளார்.மிகப்பெரும் பிரச்னை, மிகப்பெரிய சிக்கலுக்கு தீர்வு காணப்படும்.அணுஆயுத பிரச்னை, வடகொரியா மீது பொருளாதார தடை தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்து தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், அமெரிக்க அதிபரின் கருத்திற்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.பேச்சுவார்த்தை சமாதானத்திற்கு வழிவகுக்கும் என நம்புகிறேன் என்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கிம் ஜாங் அன் – டொனால்டு டிரம்ப் இடையே 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது இரு தலைவர்களின் முக்கிய உதவியாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள் மட்டுமே உடன் இருப்பர் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த சந்திப்பு குறித்து டிரம்ப் கூறும்போது, ‘இது மிகவும் அற்புதமான கூட்டம், நிறைய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எதிர்பார்த்ததைவிட இந்த பேச்சுவார்த்தை சிறப்பாக இருந்தது. இருவரும் முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளோம்’ என்றார். ஆனால் அது எந்த துறை சார்ந்தது என்ற விவரத்தை வெளியிடவில்லை.

பின்னர் சிங்கப்பூரில் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின் டொனால்ட் ட்ரம்ப்- கிம் ஜாங் உன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.மேலும் இரு நாடுகளுக்கிடையேயான உடன்பாடு விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

பின்னர் பேசிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், கடந்த காலங்களில் நடந்தவற்றை மறக்க முடிவு செய்துள்ளோம்.உலகம் மிகப்பெரிய மாற்றத்தை பார்க்கும் என வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் பேட்டியளித்துள்ளார்.

பின்னர் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு வருமாறு நிச்சயமாக அழைப்பேன் என்று தெரிவித்தார்.மேலும் அவர் கூறுகையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடனான பேச்சுவார்த்தை அனைவரும் எதிர்பார்த்ததைவிட மிகச்சிறப்பானதாக அமைந்தது. இனி புதிய சூழலில் இரு நாடுகளின் உறவு தொடரும் வடகொரியா. அமேரிக்கா உறவால் இருநாட்டு மக்களும் மகிழ்ச்சியடைவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

பேச்சு வார்த்தை முடிந்தவுடன் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் சென்டோசாவில் உள்ள செயின்ட் ரெஜிஸ் ஹோட்டலுக்கு சென்றார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்