2-வது தடுப்பூசி தயார் ! பைசரை தொடர்ந்து மாடர்னா பயன்படுத்த அனுமதி
அமெரிக்காவில் பைசர் நிறுவன தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில் ,மாடர்னா நிறுவன தடுப்பூசிக்கு அவசர சேவைக்கு பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், அமெரிக்காவில் பைசர் நிறுவன தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.பைசர்-பயோஎன்டெக் கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.ஆகவே தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே அமெரிக்க நிறுவனமான மாடர்னா இன்க் நிறுவனம் தயாரித்து வரும் கொரோனா தடுப்பூசி 95% பலன் தருவதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது.30,000 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களிடம் நடத்தபட்ட முதற்கட்ட பரிசோதனையின் படி, கொரோனாவை கட்டுப்படுத்துவதில் 95% பலன் தருவதாகவும் இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க கொரோனா தடுப்பு மருந்து கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் மாடர்னா நிறுவன தடுப்பூசியை அவசர சேவைக்கு பயன்படுத்த அனுமதிகோரி விண்ணம் செய்யப்பட்டது.தற்போது மாடர்னா நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதனால் அமெரிக்கா முழுவதும் மருந்தை அனுப்பும் பணி விரைவில் தொடங்க உள்ளது.டிசம்பர் 2020 இறுதிக்குள் சுமார் 20 மில்லியன் டோஸ் வழங்கப்படும் என்று மாடர்னா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் மாடர்னா தடுப்பூசி மருந்து பயன்பாட்டிற்கு கிடைக்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Congratulations, the Moderna vaccine is now available!
— Donald J. Trump (@realDonaldTrump) December 19, 2020