தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்கு பின் மின் கட்டண உயர்வு..! இன்று முதல் அமல்..!
8 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு இன்று அமலுக்கு வந்தது.
தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்கு பின் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாகவும், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார். மேலும்,அனைத்து வீட்டு மின்நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மின் கட்டண உயர்வை திரும்ப பெறுமாறு, அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து மின்சார வாரிய இணையதளத்தில் மின் கட்டணம் உயர்வு குறித்த கருத்துக்களை தெரிவிக்கலாம் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய தெரிவித்திருந்தது.
இதற்காக 30 நாட்கள் கால அவகாசம் வழங்கி இருந்த நிலையில், மக்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டதையடுத்து, புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 8 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழகத்தில் மின் கட்டணம் எழுதப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.