மூன்று மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட உள்ள பாரிஸ் அருங்காட்சியகம்.!

Default Image

பாரிஸ் நகரில் புகழ்பெற்ற ஓர்சே ( Orsay museum ) அருங்காட்சியகம் தற்போது மூன்று மாதங்களுக்குப் பிறகு திறக்கப்படுகிறது.

உலகம் முழுக்க கொரோனா பாதிப்பால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனால் பல்வேறு சுற்றுலா தளங்கள் பார்வையாளர்கள் இன்றி வெறிச்சோடின. அங்கு பராமரிக்க ஆள் இன்று பூட்டப்பட்டு இருந்தன. தற்போது கொரோனா பாதிப்பு கொஞ்சம் குறைந்து வரும் நாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், பிரான்சு நாட்டில் கடந்த மே மாதம் பாதி முதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது பாரிஸ் நகரில் புகழ்பெற்ற ஓர்சே ( Orsay museum ) அருங்காட்சியகம் தற்போது மூன்று மாதங்களுக்குப் பிறகு திறக்கப்படுகிறது.

இந்த அருங்காட்சியகம் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூட்டப்பட்டிருந்தது. இந்த அருங்காட்சியகத்திற்க கோடை விடுமுறை காலத்தில் ஒரு நாளைக்கு 15 ஆயிரம் பார்வையாளர்கள் வந்து செல்வார்களாம். ஆனால், தற்போது வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வரமுடியாத காரணத்தால் ஒரு நாளைக்கு 5000 பார்வையாளர்கள் மட்டுமே வந்து செல்லும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் அந்த அருங்காட்சியக தலைவர் அரசாங்கத்திடம் அருங்காட்சியகத்தை பராமரிக்க உதவி கோரியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்