ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளைப் பெற்றெடுத்த ஆப்பிரிக்க பெண்மணி!
ஆப்பிரிக்காவிலுள்ள மாலி என்னும் நாட்டில் உள்ள பெண்மணி ஒருவர் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பிரசவித்துள்ளார். மேலும் இது மருத்துவர்கள் சொன்ன கணக்கில் இருந்து இரண்டு அதிகம் எனவும் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள மாலி எனும் எனம் நாட்டில் பெண்மணி ஒருவர் மிக அதிசயமாக 9 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். 25 வயதுடைய ஹலீமா சிஸ்லின் எனும் பெண்மணி தான் கருவுற்றிருக்கும்போது மருத்துவமனை சென்று ஸ்கேன் செய்து பார்த்தபோது மருத்துவர்கள் உங்கள் கருப்பையில் 7 குழந்தைகள் உள்ளது என கூறியுள்ளனர். இந்த பெண்மணி ஏழு குழந்தைகள் உள்ள கர்ப்பிணி என்பதற்காகவே பலராலும் ஆச்சரியமாக பார்க்கப்பட்டு வந்த நிலையில் இந்தப் பெண்மணிக்கு சிறப்பு கவனம் தேவை என்பதால் மருத்துவர்கள் மொரோக்காவில் உள்ள மருத்துவமனையில் சென்று மருத்துவம் பார்க்குமாறு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனை அடுத்து இந்த பெண்மணிக்கு ஆபரேஷன் செய்து குழந்தைகளை வெளியே எடுத்துள்ளனர். இந்நிலையில் மருத்துவர்கள் ஸ்கேன் அடிப்படையில், 7 குழந்தைக்காக காத்திருந்து எடுக்கும் பொழுது ஏழு குழந்தைகள் இல்லை. அந்த பெண்மணியின் கருப்பையினுள் 9 குழந்தை இருந்துள்ளது. ஐந்து பெண் குழந்தை மற்றும் நான்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாய் மற்றும் குழந்தைகள் அனைவருமே நன்றாக இருப்பதாக மாலியின் சுகாதார அமைச்சர் ஃபாண்டா சிபி தனது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்வாறு 9 குழந்தைகளைப் பெற்றெடுப்பது அரிதிலும் அரிதான ஒன்று எனவும் அவ்வாறு பிறந்தாலும் பலரின் குழந்தைகள் உயிருடன் பிறப்பதில்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்தப் பெண்மணிக்கு பிறந்த குழந்தைகள் அனைத்தும் உயிருடன் இருப்பதாகவும், தாய் மற்றும் குழந்தைகள் 9 பேரும் நன்றாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.