உலக வர்த்தக அமைப்பின் பெண் தலைவராக ஆப்பிரிக்க பெண்மணியான நைஜீரியாவின் முன்னாள் நிதியமைச்சர் நிகோஸி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
1995 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சர்வதேச நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி வரி உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்துவதற்கான அமைப்புதான் உலக வர்த்தக அமைப்பு. 164 உறுப்பினர்களைக் கொண்ட இந்த அமைப்பிற்கான புதிய தலைவரை தற்பொழுது தேர்வு செய்துள்ளனர். இந்த தலைவர் போட்டியில் நைஜீரியா நாட்டின் முன்னாள் நிதியமைச்சர் மற்றும் தென்கொரிய வர்த்தகத்துறை அமைச்சர் ஆகியோர் இருந்துள்ளனர்.
இதனையடுத்து, 164 உறுப்பினர்களும் ஒருமனதாக உலக வர்த்தக அமைப்பின் தலைவராக நிகோஷி அவர்களை தற்போது தேர்வு செய்துள்ளனர். உலக வர்த்தக அமைப்பின் தலைவர் பதவியில் அமரக்கூடிய முதல் ஆப்பிரிக்க மற்றும் முதல் பெண் எனும் சிறப்பு நிக்கோஸிக்கு தற்போது கிடைத்துள்ளது. இதுகுறித்து பேசியுள்ள நைஜீரியாவின் முன்னாள் நிதி அமைச்சரும், தற்போதைய உலக வர்த்தக அமைப்பின் தலைவருமாகிய நிகோஷி அவர்கள், கொரோனாவால் உலகளாவிய பொருளாதாரத்தை பாதித்திருந்தாலும் மீண்டும் உலகளாவிய பொருளாதாரம் மற்றும் சுகாதாரம் விளைவுகளில் கவனம் செலுத்தி மீட்டு கொண்டு வர வேண்டும் என்பதே தனது முதன்மை பணி என தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…