முதுமலையில் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் உறுதி!
முதுமலை புலிகள் காப்பகத்தில் உயிரிழந்த பன்றிகளுக்கு ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் பாதிப்பு உறுதி.
முதுமலை புலிகள் காப்பகத்தில் உயிரிழந்த பன்றிகளுக்கு ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது. கடந்த 10 நாட்களில் 27 பன்றிகள் உயிரிழந்த நிலையில், அவற்றின் மாதிரிகளை ஆய்வு செய்ததில் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதியானது. இறந்த பன்றிகளின் உடல் உறுப்பு மாதிரிகள் உத்தரபிரதேசதுக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டது.
இந்த ஆய்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், உயிரிழந்த அனைத்து பன்றிகளுக்கும் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் நோய் என்பது பன்றிகளுக்கு மட்டுமே பரவ கூடியது, மனிதர்களுக்கு பரவாது. அதேபோல் மற்ற விலங்குகளுக்கும் பரவாது என தெரிவிக்கப்ட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் இதுகுறித்து அச்சப்பட தேவையில்லை எனவும் கூறியுள்ளனர்.