ஆப்கனிஸ்தானில் 150 ஆக உயர்ந்த வெள்ள பலி எண்ணிக்கை!

ஆப்கானிஸ்தானில் கன மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் வடக்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கொட்டித் தீர்த்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக 1500க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்து பலர் மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேசிய மீட்பு குழுவினர் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்பொழுது வரை இந்த வெள்ளத்தில் 150 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 200க்கும் அதிகமானவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்னும் பலர் மண்ணுக்குள் புதைந்து இருப்பதால் அவர்களை மீட்கும் பணிகளில் ராணுவம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025
பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல்…உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம்!
April 23, 2025