ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறிவிட கூடாது என ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்ற பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டில் உள்ள மக்கள் மற்றும் அந்நாட்டில் குடியிருந்த பல்வேறு நாட்டு மக்கள் தங்கள் நாடுகளுக்குக் குடி பெயர்ந்தனர். இந்நிலையில், நேற்று அமெரிக்க ராணுவம் முழுவதுமாக ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியது. மேலும் தாங்கள் வெளியேறிவிட்டாலும், ஆப்கானிஸ்தானில் உள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை ஐக்கிய நாடுகள் சபையின் மூலமாக செய்வோம் எனவும் அமெரிக்கா உறுதி அளித்துள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. அதன் படி எந்த ஒரு நாட்டையும் அச்சுறுத்தவோ, அல்லது தாக்குதல் நடத்துவதற்கோ ஆப்கானிஸ்தானை பிற நாடுகள் பயன்படுத்தப்படக் கூடாது எனவும், பயங்கரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தானில் புகலிடம் அளிக்க கூடாது என வலியுறுத்தி உள்ளது. மேலும், ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற விரும்பக்கூடிய நாட்டு மக்கள் மற்றும் பிற நாட்டு மக்களை ஒழுங்கான முறையில் வெளியேற தலிபான்கள் அனுமதிக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…