ஆப்கானிஸ்தான் மசூதியில் இரட்டை குண்டு வெடிப்பு ! 62 நபர் பலி !
ஆப்கானிஸ்தான்: நன்கர்கார் மாகாணத்தில் ஹஸ்கா மினா மாவட்டத்தில் உள்ள ஜா தரா பகுதியில் உள்ள மசூதியில் பொதுமக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது சுமார் 2 மணியளவில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.
இந்த குண்டுவெடிப்பில் 28 பேர் சம்பவ இடத்திலயே பலியானதாகவும், 50 பேர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், முதற்கட்ட தகலின் படி 62 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.