இந்திய அணியிடம் போராடி தோற்ற ஆப்கானிஸ்தான்! மூன்றாம் இடத்தில் இந்தியா !
இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது. முதல் போட்டியில் இந்திய அணியும் , ஆப்கானிஸ்தான் அணியும் மோதியது. இப்போட்டி சவுத்தாம்ப்டனில் உள்ள தி ரோஸ் பவுல் மைதானத்தில்நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா , லோகேஷ் ராகுல் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து இருவரும் சொதப்பலாக விளையாடினர். ஐந்தாவது ஓவரில் ரோஹித் சர்மா 1 ரன் எடுத்து வெளியேறினார்.
பின்னர் களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ராகுல் இருவரும் நிதானமாக விளையாடி அணியின் ரன்களை சற்று உயர்த்தினர். ஆனால் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் திணறிய ராகுல் 30 ரன்களில் வெளியேறினார்.
இறுதியாக இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 224 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சில் முகமது நபி 2 விக்கெட்டை பறித்தார்.225 ரன்கள் இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்க உள்ளது .
ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க ஹஸ்ரத்துல்லா ஸாசாய், குல்படின் நாயப் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலிருந்து இந்திய அணி பந்து வீச்சில் திணறிய இருவரும் நிதானமாக விளையாடி அணியின் ரன்களை சேர்த்தனர்.
அந்நிலையில் 10 ரன்கள் எடுத்து ஹஸ்ரத்துல்லா ஸாசாய் வெளியேறினார். அதன் பின்னர் ரஹ்மத் ஷா களமிறங்கி நிதானமாக விளையாடினார். 17-வது ஓவரில் ஹர்திக் பாண்டிய வீசிய பந்தை குல்படின் நாயப் அடித்த போது விஜய் சங்கரிடம் கேட்சை கொடுத்து 27 ரன்னில் அவுட் ஆனார்.
பின்னர் களமிறங்கிய ரஹ்மத் ஷா 36,ஹஷ்மதுல்லா ஷாஹிடி 21 ,அஸ்கர் ஆப்கான் 8, முகமது நபி 52 , நஜிபுல்லா ஸத்ரான் 21, ரஷீத் கான் 14 ரன்களுடன் வெளியேறினார்.
இறுதியாக ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 213 ரன்கள் எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து. இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்து உள்ளது.