ஆப்கானிஸ்தான் கார் குண்டுவெடிப்பு – 30 பேர் பலி, 90 பேர் படுகாயம்!
ஆப்கானிஸ்தானில் உள்ள அரசாங்க விருந்தினர் மாளிகைக்கு அருகே கார் குண்டு வெடித்ததில் 30 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன், 90 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் உள்ள கிழக்கு லாகூர் மாநிலத்தின் தலைநகராகிய புல்-இ-ஆலம் பிரதேசத்தில் உள்ள அரசினர் விருந்து மாளிகைக்கு அருகே கார் குண்டு வெடிப்பு ஒன்று நேற்று நிகழ்ந்துள்ளது. இந்த குண்டு வெடிப்பின் போது தலை நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் தேர்வுக்காக உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் அந்தக் கட்டடத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பின் போது 30 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன், 90-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த குண்டு வெடிப்பு காரணமாக அருகிலிருந்த மருத்துவமனைகள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்களும் அழிக்கக்கப்பட்டுள்ளதாகவும், அருகில் இருந்த மருத்துவமனை ஒன்றில் உள்ள ஒரு வார்டு குண்டு வெடிப்பு காரணமாக முழுவதுமாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தலிபான் தீவிரவாதிகளின் செயலாக இருக்கலாம் என கருதப்பட்டாலும் தற்பொழுது வரை இந்த குண்டு வெடிப்புக்கான காரணம் எதுவும் தெரியவரவில்லை.