ஆப்கானிஸ்தான் : சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்ட முன்னாள் துணை அதிபரின் சகோதரர்…!
ஆப்கானிஸ்தானின் முன்னாள் துணை அதிபரின் சகோதரர் ரோகுல்லா சலே தாலிபான்களால் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதும் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி நாட்டைவிட்டு வெளியேறினார். அப்பொழுது துணை அதிபராக இருந்த அம்ருல்லா சலே தன்னைத்தானே ஆப்கானிஸ்தானின் அதிபராக பிரகடனப்படுத்திக் கொண்டார்.
மேலும், அவரது சொந்த மாகாணமான பஞ்ச்ஷீரில் தலிபான்களுக்கும் எதிர்ப்பு படைகளுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது. இந்நிலையில், அம்ருல்லா சலேயின் மூத்த சகோதரனான ரோகுல்லா சலேயை தலிபான்கள் சிறை பிடித்ததாகவும், ஆனால் அவரைச் சித்திரவதை செய்து கொலை செய்து விட்டதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.