ஆப்கானிஸ்தான்: ஒரே நாளில் நடத்தப்பட்ட ராணுவ தாக்குதலில் 254 தலிபான்கள் பலி!

ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 254 தலிபான்கள் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளின் அட்டூழியம் தொடர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் ராணுவம் தாலிபான்களை அடக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் ராணுவம் நேற்று ஒருநாள் நடத்திய தாக்குதலில் தலிபான் அமைப்பை சேர்ந்த 254 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 97 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், இது குறித்து தெரிவித்துள்ள அந்நாட்டு பாதுகாப்பு துறை காஸ்னி , கந்தகர் , ஹெராத் , பாரக் , ஜொஸ்வான், பால்க், சமன்கண், ஹெல்மாண்ட், தஹார், குண்டுஸ் மற்றும் காபூல் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலில் 254 பேர் உயிரிழந்ததுடன், இவர்களிடமிருந்து பயங்கரமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், 13 சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு அதை செயலிழக்க செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஐபிஎல்லை விட்டு விலகிய ருதுராஜ்! கேப்டனாக களமிறங்கும் தோனி!
April 10, 2025
கோவை தனியார் பள்ளி விவகாரம் – பள்ளியின் முதல்வர் சஸ்பெண்ட்!
April 10, 2025