ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு, 3 பேர் காயம்.!
ஆப்கானிஸ்தான்: காபூலின் பி.டி 6 இன் புல்-இ-சொக்தா என்ற பகுதியில் கடந்த வியாழக்கிழமை காலை ஒரு வெடிப்பு நிகழ்ந்தது, இதில் மூன்று பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில், இந்த குண்டுவெடிப்பு குறித்து அந்நாட்டு அரசாங்கம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. தற்போது, காபூலில் சாமன்-இ-ஹூசூரி பகுதியில் ஏற்பட்ட குண்டுவெடிப்புக்குப் பின்னர் இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
கடந்த சில மாதங்களில் ஆப்கானிஸ்தானில் இந்த வன்முறைகள் காணப்படுகிறது. தலிபானுக்கும் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தைகள் இருந்தபோதிலும் இந்த வன்முறை நடந்து வருகிறது.