ஆப்கான் பிரச்சனை : பேச்சுவார்த்தை நடத்த போப் வலியுறுத்தல்…!
ஆப்கான் பிரச்சனை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த போப் வலியுறுத்தல்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆளும் அரசுக்கு எதிரான தொடர் தாக்குதலில் தாலிபான்கள் ஈடுபட்டு வந்த நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை நேற்று தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினார்கள். இதனால், அங்கு தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.
இந்நிலையில், ஆப்கானில் நடைபெற்றுள்ள பிரச்சனை குறித்து, போப் பிரான்சிஸ் வேதனை தெரிவித்துள்ளதோடு, இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துமாறும் வலியுறுத்தியுள்ளார். வாடிகனில் நடைபெற்ற வாராந்திர வழிபாட்டின் போது, இதுகுறித்து பேசிய அவர், ஆப்கானிஸ்தான் குறித்து ஒருமித்த அக்கறைகொள்வோரின் குழுவில் தானும் இணைவதாக தெரிவித்தார். மேலும், அவர்களுக்காக தன்னுடன் இணைந்து, இறைவனிடம் பிரார்த்திக்குமாறு கேட்டு கொண்டுள்ளார்.