ஆப்கானிஸ்தானில் ரமலான் மாதத்தையும் பொருட்படுத்தாமல் தாக்குதல்! 12 பேர் பலி ..! 31 பேர் காயம்…1
ரமலான் மாதத்தையும் பொருட்படுத்தாமல் ஆப்கானிஸ்தானில் அமைச்சரகம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். தலைநகர் காபுலின் மேற்கு பகுதியில் ஊரக மறுவாழ்வு மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தில் தற்கொலைப் படையைச் சேர்ந்தவன் குண்டு வெடிக்கச் செய்தான். இந்தக் கொடூரத் தாக்குதலில் அங்கிருந்த பெண்கள், குழந்தைகள் உள்பட 12 பேர் கொல்லப்பட்டதோடு 31 பேர் காயமடைந்தனர்.
ரமலான் மாதம் என்பதால் நோன்பு திறக்க பணியாளர்கள் முன்கூட்டியே அலுவலகத்திலிருந்து சென்றுவிட்டதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. ரமலானை ஒட்டி மூன்று நாள் போர் நிறுத்தத்தை ஆப்கன் அரசு அறிவித்திருந்த நிலையில், இத்தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.