ஆப்கனிஸ்தானில் பத்திரிகையாளர் மற்றும் ஓட்டுநர் அடையாளம் தெரியாத நபரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
ஆப்கனிஸ்தானில் உள்ள ஜலாலாபாத்தில் அரபனோ கேலே எனும் பகுதியில் வசித்து வரக்கூடிய தொலைக்காட்சி பத்திரிகையாளர் ஒருவர் தனது காரில் டிரைவருடன் வேலைக்கு சென்றுகொண்டிருந்துள்ளார். அப்பொழுது இவர் சென்றுகொண்டிருந்த காரின் மீது அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில்பெண் பத்திரிகையாளரும் , ஓட்டுனரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இந்த கொலைக்கு பின்னல் தங்களது குழு இல்லை என தலிபான் தீவிரவாத அமைப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆப்கனிஸ்தான் பாதுகாப்பு நிறுவனங்களிடம் பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள ஆப்கனிஸ்தானின் சுதந்திர பத்திரிகையாளர் சங்கம் கோரியுள்ளது. இத்துடன் ஆப்கனிஸ்தானில் இந்த வருடம் மட்டும் 10 பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொழும்பு : சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலைத் தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்திற்காக நடந்த தேர்தலிலும் அதிபர் அநுர குமரா திசநாயக…
சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 18.8 செ.மீ மழையும், கோடியக்கரையில்…
சென்னை : தமிழகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதிக்கமிஷன் நேற்று வருகை தந்தனர். அதனைத்…
சென்னை : கடந்த 2 வாரங்களாக குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று நாளில் உச்சம் தொட்டுள்ளது. இதனால்…
சென்னை : பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வோர் ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காமல் அவதியுறுவதுண்டு. அவர்கள், அரசுப்பேருந்துகளில்…
சென்னை : கடந்த நவ-14 அன்று 3D தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவான கங்குவா திரைப்படமானது தமிழ், மலையாளம், இந்தி,…