ஆப்கானிஸ்தானில் 14-16 வயது மதிக்கதக்க சிறுமி ஒருவர், தனது பெற்றோர்களை கொலை செய்த இரண்டு தலிபான் பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றார்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள குமர் குல் என்ற சிறுமி, தனது பெற்றோர்களுடன் கிரிவா கிராமத்தில் வசித்து வந்தார். அவளின் தந்தை, அரசாங்க ஆதரவாளராக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, கடந்த வாரம் கிரிவா கிராமத்தில் உள்ள அந்த சிறுமியின் வீட்டிற்குள் தாலிபன் தீவிரவாதிகள் நுழைந்து, அவரின் பெற்றோர்களை சுட்டுக்கொன்றனர். தனது பெற்றோர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து அந்த சிறுமி, தனது குடும்பத்தின் ஏ.கே .47 துப்பாக்கியை எடுத்து அந்த தீவிரவாதிகளை சுட்டார்.
இந்த தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், அதில் பல தீவிரவாதிகள் காயமடைந்ததாக கோர் மாகாண அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த சிறுமி, 14 முதல் 16 வயதுக்குட்பட்டவர் எனவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு பின், பயங்கரவாதிகள் குமர் குலின் வீட்டைத் தாக்க வந்தனர், ஆனால் உள்ளூர் மக்கள் மற்றும் அரசு ஆயுத குழுவால் அவர்கள் வெளியேற்றப்பட்டனர். இதன்காரணமாக, அந்த சிறுமியும், அவரின் தம்பியையும் ஒரு பாதுகாப்பான இடத்திற்கு அதிகாரிகள் அழைத்து சென்றனர்.
மேலும், தீவிரவாதிகளை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற அந்த சிறுமியின் புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும் அந்த சிறுமியின் செயல், மக்களிடையே பாராட்டை பெற்று வருகிறார்.
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…