பாகிஸ்தானில் கடத்தப்பட்ட ஆப்கன் தூதர் மகள் சித்திரவதைக்கு பின் விடுப்பு..!
பாகிஸ்தானில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரின் மகள் கடத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
அண்டை நாடான பாகிஸ்தானில் பாகிஸ்தானுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் நஜிபுல்லா அலிகிலின் மகள் சில்சிலா அலிகில் கடத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே விடுவிக்கப்பட்டார் எனவும் விடுவிக்கப்பதற்கு முன்பு கொடூரமாக தாக்கப்பட்டார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபாகன் தூதர் நஜிபுல்லா அலிகிலின் மகள் சில்சிலா அலிகில் நேற்று மாலை இஸ்லாமாபாத்தில் உள்ள தெஹ்ஸீப் பேக்கரி அருகே காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், இதுவரை கடத்தப்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் போலீசார் கூறுகின்றனர்.
நேற்று மதியம் 1.30 மணியளவில் ஜின்னா சந்தை அருகே சில்சிலா அலிகில் கடத்தப்பட்டு இரவு 7 மணியளவில் காயமடைந்த நிலையில் விடுவிக்கப்பட்டார். இதன் பின்னர் சில்சிலா அலிகில் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் குற்றவாளிகளை விரைவாக அடையாளம் கண்டு வழக்குத் தொடருமாறு பாகிஸ்தான் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது.