இளம்பெண் ஒருவர் தீவிரவாதிகளின் துப்பாக்கியை பிடுங்கி அவர்களை சரமாரியாக சுட தீவிரவாதிகள் பயந்து ஓட வைத்த பெண்ணை பலரும் பாராட்டி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாத அமைப்பு பல மாகாணங்களை எல்லாம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் அங்கு உள்ள ராணுவத்திற்கு இணையாக பயங்கரவாதிகளின் தலிபான் அமைப்பு உள்ளது.அதில் அதிக பயங்கரவாதிகள் உள்ளனர். மேலும் இவர்கள் ஆயுதமேந்தி ஆப்கானிஸ்தானை பிடிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்திவருகின்றனர்.
இதனால் ஆப்கானிஸ்தான் நாட்டு ராணுவத்துக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெறும் போராட்டத்தில் பல அப்பாவி நாட்டு மக்கள் தினமும் பலியாகி வருகின்றனர். மேலும் இந்த தீவிரவாத அமைப்புகளுக்கு சில நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவிகளை குவித்து வருகின்றது.இதே சமயத்தில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் ஆப்கானிஸ்தான் அரசுக்கு தாலிபான் தீவிரவாதிகளை எதிர்த்துப் போராட ஆதரவும் தெரிவித்து வருகின்றன.
இவ்வாறு இருக்க பயங்கர தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களின் வீடுக்குள் புகுந்து சரமாரித் துப்பாக்கித் தாக்குதல் நடத்துவது அனுதினமும் வாடிக்கையாகிவிட்டது. இதேபோல ஆப்கானிஸ்தானின் கோர் என்ற மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு வீட்டுக்குள் புகுந்து குமர் கல் என்ற 15 வயது பெண்ணின் தாய் மற்றும் தந்தையரை அந்த இளம்பெண்ணின் கண் முன்னேயே சரமாரியாக இருவரையும் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.
தன் கண் முன்னேயே தாய்-தந்தையரின் துடிதுடிக்க இறந்த நிகழ்வை கண்டு ஆத்திரம் அடைந்த இளம்பெண் குமர்கல் வெகுண்டு எழுந்து தீவிரவாதிகளின் துப்பாக்கியை பிடுங்கி அவர்களை சரமாரியாக சுட தொடங்கினாள்;அவருடைய துப்பாக்கி சுட்டில் பயந்து தீவிரவாதிகள் ஓடினர். தற்போது குமார் தாலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போராடிய இளம் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
அவர் நிகழ்த்திய இந்த தீரச்செயல் ஆனது தற்போது சமூக வலைதளங்களில் பிரபலமாகி வருகிறார். மேலும் இவர் தான் சமீபத்தில் துப்பாக்கி ஏந்தியபடி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இதேபோல் எத்தனை தீவிரவாதிகள் வந்தாலும் என் தாய் தந்தையரை கொன்ற அவர்களைப் பழிவாங்குவேன் என்று சூலுரைத்து அதில் தெரிவித்து உள்ளார். குமர்கல்லின் தாய் தந்தையர் போலவே ஆப்கனில் பல அப்பாவி குடிமக்கள் தினமும் கொல்லப்பட்டு ரத்தம் கரைப்புரண்டு ஓடும் நிகழ்வு நடந்து வருகின்றனர். அவர்களுக்கு நீதி கிடைக்க இளம்பெண் குமல்கல் தொடர்ந்து போராட உள்ளதாக தெரிவித்துள்ளார். இவரது இந்த வீரச் செயல் மத்திய தரைக்கடல் நாடுகள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…