நேரடியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஏலே…!
ஹலீதா ஷமீம் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள ஏலே படத்தினை நேரடியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சில்லுக்கருப்பட்டி பட இயக்குனரான ஹலீதா ஷமீம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஏலே .சமுத்திரகனி , மணிகண்டன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படமானது அப்பா-மகனை சுற்றி நடக்கும் கதைகளத்தை கொண்டதாம் . பிப்ரவரி 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்ட இந்த படத்தினை ரிலையன்ஸ் நிறுவனம்,ஒய்நாட் ஸ்டுடியோஸ் மற்றும் வால் வாட்சர் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தின் ரிலீஸில் பல சிக்கல்கள் உள்ளதாக கூறப்பட்டிருந்து .
திரையரங்குகளில் வெளியாகி 30 நாட்கள் கழித்த பின்னரே ஓடிடியில் வெளியிட வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கடிதம் கேட்டதும் ,அதற்கு ஏலே படத்தின் தயாரிப்பு நிறுவனம் மறுத்ததும் குறிப்பிடத்தக்கது.அதன்பின் இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றும் எந்த சுமூகமான முடிவும் எடுக்க வில்லை .
இந்த நிலையில் தற்போது ஏலே தயாரிப்பு நிறுவனம் அதிரடியான முடிவை ஒன்றை எடுத்துள்ளது .ஏலே படத்தினை திரையரங்குகளிலும் ,ஓடிடியிலும் வெளியிடாமல் முதல் முறையாக தொலைக்காட்சியில் ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஆம்நேரடியாக விஜய் தொலைக்காட்சியில் பிப்ரவரி 28-ம் தேதி மதியம் 3 மணிக்கு ஏலே படத்தினை வெளியிட உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,சில ஆச்சரியகரமான புது விதிகளாலும் தவிர்க்க முடியாத சில காரணங்களாலும் படத்தைத் திரையரங்கிற்குக் கொண்டு வர முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆகையால் திரையரங்குகளைத் தவிர்த்து எங்கள் படத்தினை உலகம் முழுதும் உள்ள ரசிகர்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது என்று தெரிவித்துள்ளது . அதனுடன் படத்தினை தொலைக்காட்சியில் வெளியிடுவது குறித்து ஹலீதா ஷமீம் கூறியுள்ளதாவது, என் மனதிற்கு நெருக்கமான ஏலே படமானது மிகப்பெரும் வெளியீடாக பெரும் எண்ணிக்கையிலான ரசிகர்களை ஒரே நாளில் என் படம் சென்றடைவதை காண மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.இது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#Aelay Exclusive World Premiere on @vijaytelevision !
Tune in on Feb 28 at 3PM #AelayFromFeb28 #AelayOnVijayTV@thondankani @halithashameem @sash041075 @PushkarGayatri @chakdyn @Shibasishsarkar @StudiosYNot @RelianceEnt @wallwatcherfilm @APIfilms @SonyMusicSouth @SureshChandraa pic.twitter.com/enctipEZTw— Y Not Studios (@StudiosYNot) February 11, 2021