ஷிவாங்கி சூப்பர் சிங்கர் பாடல் நிகழ்ச்சியில் பாடியதால் மக்களுக்கு மத்தியில் அறியப்பட்டவர். அதற்கு பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார். அவர் எந்த ஒரு விஷயம் செய்தாலும் அவரை மக்கள் ரசிக்கின்றார்கள்.
இந்த நிலையில் சமீபத்தில் ஷிவாங்கி விஜய் தொலைக்காட்சி விருது விழாவில் கலந்து கொண்டுள்ளார். இதில் விருது வாங்கியவுடன் பேசிய ஷிவாங்கி கண்கலங்கிக்கொண்டே ” எனது குரலால் நான் பள்ளியில் படிக்கும் போது அவமானப்படுத்த பட்டதாகவும், பசங்கள் எல்லாரும் அந்த பொண்ணு ஒரு மாதிரி பேசும் என்றும், குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வந்தவுடன் எல்லாரும் என்னை அவர்கள் விட்டு குழந்தையாக பார்த்தார்கள். தன்னை அனைத்து பெரியவர்களும் ஷிவாங்கி பிள்ளை ஷிவாங்கி பிள்ளை, ஷிவாங்கி பிள்ளை ” என அழைப்பதாகவும் கண்கலங்கிக்கொண்டே கூறியுள்ளார்.
மேலும் ஷிவாங்கி தற்போது சினிமாவில் அறிமுகமாகவுள்ளார் . ஆம் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் டான் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ஷிவாங்கியும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…