அதிமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று வெளியீடு!
- நாடாளுமன்றத் தேர்தலுக்கான அதிமுக போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் இன்று வெளியிடப்படும் என்று தெரியவந்துள்ளது
- இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது
இந்த வருடம் மே மற்றும் ஏப்ரல் மாதங்களில் இந்தியா முழுவதும் மூன்று கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு அணிகள் கூட்டணி பேச்சுவார்த்தை மூலம் உருவாகியுள்ளன. திமுக நேற்று தங்கள் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் தோழமை கட்சிகள் போட்டியிடும் 20 தொகுதிகளுக்கான பட்டியலை அறிவித்தது. அதே போன்று தங்கள் மற்றும் அதன் கூட்டணி அணிகளின் தொகுதிகளை இன்று அதிமுக வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.