சந்திராயன்- 2 தொடர்ந்து அடுத்து சூரியனில் ஆதித்யா எல்-1 இஸ்ரோ அதிரடி !
இஸ்ரோ நிறுவனம் நிலவை ஆய்வு செய்ய கடந்த 2008 -ஆம் ஆண்டு சந்திராயன்-1 விண்கலத்தை அனுப்பியது. சந்திராயன் 1 விண்கலம் 312 நாட்கள் ஆய்வு செய்தது. இதைத் தொடர்ந்து இஸ்ரோ நிறுவனம் நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்ய சந்திராயன் 2 விண்கலத்தை செயல்படுத்த முடிவு செய்தது.
இதற்கான பணிகள் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.இறுதியாக சந்திராயன் 2 ஜி.எஸ்.எல்.வி. மார்க் – 3 ராக்கெட் மூலம் ஜூலை 15- ஆம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் ஏவ இருந்தது.
ஆனால் ராக்கெட் ஏவுவதற்கு தயாராக இருந்தபோது அதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால். பின்னர் ராக்கெட் ஏவும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.இதை தொடர்ந்து அந்த தொழில் நுட்ப கோளாறை இஸ்ரோ சரிசெய்து நேற்று பிற்பகல் 2.43 மணிக்கு சந்திராயன் 2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.
இந்நிலையில் சந்திராயன்- 2 தொடர்ந்து சூரியனின் வெளிபரப்பை ஆய்வு செய்ய விண்கலத்தை அனுப்ப இஸ்ரோ முடிவு செய்து உள்ளது. 2020-ம் ஆண்டு முதல் ஆறு மாதத்திற்குள் ஆதித்யா எல்-1 என்ற செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்புவதே அடுத்த கட்ட திட்டம் என கூறியுள்ளது.
15 லட்சம் கீ.மீ தூரத்தில் உள்ள சூரியனின் வெளிபரப்பை ஆய்வு செய்யவதால் அதன் மூலம் பூமியின் சுற்று சூழல் மாறுபாட்டை கண்காணிக்க முடியும் என இஸ்ரோ நிறுவனம் கூறி உள்ளது.