துருவ் விக்ரமின் மிரட்டலான நடிப்பில் வெளியானது ஆதித்யா வர்மா ட்ரெய்லர்! வீடியோ இதோ!
சீயான் விக்ர மகன் துருவ் விக்ரம் நடிப்பில் நவம்பர் 8ஆம் வெளியாக உள்ள திரைப்படம் ஆதித்யா வர்மா. இந்த படத்தை கிரிசையா என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தில் பனிதா சந்து ஹீரோயினாக நடிக்க உள்ளார். இந்த படத்தை இ4 பட நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தின் ட்ரைலர் மற்றும் டீசர் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் விக்ரம், துருவ் விக்ரம், இயக்குனர் கிரிசையா, தயாரிப்பாளர், கலைப்புலி எஸ்.தாணு என பலர் கலந்துகொண்டனர்.
இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த ட்ரைலரில் துருவ் விக்ரமின் நடிப்பு மிரட்டலாக இருக்கிறது. காதல், வலி, என ட்ரைலரில் அசத்தலாக நடித்துள்ளார். இந்த ட்ரைலர் வீடியோ இதோ!