நடிகர் ஆதி தமிழ் சினிமாவில் ‘மிருகம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர். அதனை தொடர்ந்து சில தமிழ் திரைப்படங்களிலும் நடித்திருந்தார். தற்போது தமிழ்,தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்று ‘சிவுடு’. இப்படத்தை இயக்குநர் சுசீந்திரன் இயக்குகிறார். இந்த படத்தில் ஆதிக்கு ஜோடியாக நடிகை நிக்கி கல்ராணி நடிக்கிறார்.
இதற்கு முன்பு முன்னதாக, யாகாவாராயினும் நாகாக்க, மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் நிக்கி கல்ராணி ஆதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதில் கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியான மரகதநாணயம் படத்தின் மூலம் இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.
இருவரும் தற்போது காதலித்து வருவதாக நீண்ட காலமாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதை அவர்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. ஆதி வீட்டில் நடந்த அவரது தந்தையின் பிறந்த நாள் விழாவில் நிக்கி கல்ராணி பங்கேற்ற புகைப்படங்கள் வைரல் ஆன நிலையில் இப்படி ஒரு செய்தி பரவியது.
இதனையடுத்து தற்போது ஆதி அளித்த சமீபத்திய பேட்டியில் தனது திருமணம் குறித்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் ” எனது திருமணம் பற்றிய அறிவிப்பு விரைவில் வரும். ஆனால் காதல் திருமணம் தான் நடக்கும். இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன் எங்கள் திருமணம் நடக்கும் ” என கூறியுள்ளார்.
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…
டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…
சென்னை : தனுஷின் 'துள்ளுவதோ இளமை', தாஸ், என்றென்றும் புன்னகை போன்ற பல படங்களிலும், பல முன்னணி விளம்பரங்களிலும் நடித்துள்ள…