புதிய திரைப்படத்திற்காக தற்காப்பு கலை மற்றும் குதிரை சவாரி ஹிப் ஹாப் ஆதி கற்றுக்கொண்டு வருகிறார்.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் ,நடிகராகவும் வலம் வரும் ஹிப் ஹாப் ஆதி. இவர் தற்போது இயக்கி நடித்துள்ள திரைப்படம் “சிவகுமாரின் சபதம்”. நெசவுத்தொழிலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் வரும் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தை தொடர்ந்து அன்பறிவு என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தை தொடர்ந்து ஆதி அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்தை குறித்த தகவல் பரவி வருகிறது. இவர் நடிக்கும் அடுத்த படத்திற்கு HHT6-என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இதுவரை இல்லாத அளவிற்கு இந்த திரைப்படம் அதிரடி ஆக்க்ஷன் கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றார்கள். இந்த படத்திற்காக ஆதி..தற்காப்பு கலை மற்றும் குதிரை சவாரி கற்று கொண்டுவருவதாக கூறப்படுகிறது.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்கும் எனவும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…