லிங்குசாமி படத்தில் வில்லனாக நடிக்கும் நடிகர் ஆதிக்கு 4 கோடி சம்பளம் பேசியுள்ளதாக தகவல்
தமிழில் ரன், சண்டக்கோழி, பையா, அஞ்சான் உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கியும் , தயாரித்தும் வந்த லிங்குசாமி கடைசியாக சண்டைக்கோழி-2 படத்தினை இயக்கியிருந்தார். அதன் பின் கடந்த 2 ஆண்டுகளாக எந்தவொரு படத்தையும் இயக்கவில்லை.
இந்த நிலையில், இயக்குனர் லிங்குசாமி அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தில் ஹீரோவாக பிரபல தெலுங்கு நடிகரான ராம் பொதினேனி நடிக்க உள்ளார் என்றும், இந்த படத்தை ஸ்ரீனிவாசா சித்தூரி என்பவர் தயாரிக்கவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது.
அதனை தொடர்ந்து படத்திற்கு இசையமைப்பாளர் தேவ் ஸ்ரீ பிரசாத் இசையமைப்பதாவும், ராம் பொதினேனிக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக அடுத்ததாக அறிவிப்பு வெளியானது.
இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்று இந்த படத்தில் ஆதி இணைந்தார். இந்த படத்தில் வில்லனாக நடிக்க 4 கோடி சம்பளம் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படத்தில் வில்லன் கதாபாத்திரம் முக்கியமான கதாபாத்திரம் என்பதால் நடிகர் ஆதி வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
மிருகம் படம் மூலம் பிரபலமான ஆதி அய்யனார், ஆடுபுலி, ஈரம், அரவான், யூ டர்ன், உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது தமிழில் 2 படங்களிலும், தெலுங்கில் 2 படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…