துருவ் விக்ரமிற்க்காக மீண்டும் பாடலாசிரியாராக களமிறங்கும் சிவகார்த்திகேயன்!

விக்ரம் மகன் துருவ் விக்ரம் தமிழில் அறிமுகமாகும் முதல் படமே பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு தற்போது தயாராகி உள்ளது. கிரிசையா இயக்கும் ஆதித்யா வர்மா படத்தை E4 பட நிறுவனம் தயாரித்துள்ளது.
தெலுங்கில் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்தான் ஆதித்யா வர்மா. இப்பத்திற்கு ரதன் இசையமைத்து வருகிறார். முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது.
அதனை தொடர்ந்து அடுத்த பாடலை சிவகார்த்திகேயன் எழுத உள்ளாராம். இப்பாடலை அனிருத் பாட உள்ளாராம். இதற்கு முன்னர் இதேபோல சிவகார்த்திகேயன் எழுதிய கல்யாண வயசு பாடலை கோலமாவு கோகிலா படத்தில் எழுதி இருந்தார். அனிருத் இப்பாடலை பாடி இருந்தது குறிப்பிட தக்கது.