தெலுங்கில் அதர்வா அறிமுகமாகும் முதல் பட டீசர் இதோ! மிரட்டும் ஜிகர்தண்டா தெலுங்கு வெர்சன்!
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ஜிகர்தண்டா. இந்த படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமிமேனன், கருணாகரன் என பலர் நடித்து இருந்தனர். இந்த படத்தில் அசால்ட் சேதுவாக பாபி சிம்ஹா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இதற்க்கு தேசிய விருதும் கிடைத்து இருக்கும்.
இந்த படம் தற்போது தெலுங்கில் தயாராகி விட்டது. வால்மீகி எனும் தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார். நடிகர் அதர்வா, சித்தார்த் நடித்த ரோலில் நடித்து உள்ளார். பாபி சிம்ஹா ரோலில் வருண் தேஜ் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. இப்படம் செப்டம்பர் 13இல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.