அடேயப்பா… இது குழந்தையா ? தவளையா? ஆச்சரியத்தில் மூழ்கிய கிராம மக்கள்!

Default Image

சல்மன் எனும் தீவில் மனித குழந்தை அளவு கொண்ட தவளை ஒன்று பிடிபட்டுள்ள நிலையில், இந்த தவளையை பார்த்த கிராம மக்கள் அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.

தவளை என்றாலே மிக சிறிய அளவில் தான் நாம் பார்த்திருப்போம். சில இடங்களில் சற்றே பெரியதாக இருக்கும், ஆனால் ஒரு மனித குழந்தை அளவில் பெரிய ராட்சத தவளையை காண்பது மிக மிக அரிது. சாலமன் தீவுகளில் வசிக்கக்கூடிய மக்கள் அங்கு சுற்றித் திரியக் கூடிய தவளைகள், காட்டு பன்றிகள் என காட்டு விலங்குகளை வேட்டையாடி உண்ணும் வழக்கமுடையவர்கள். இந்த தீவில் வசிக்கக்கூடிய ஜிம்மி ஹியூகோ எனும் 35 வயதுடைய நபர் காட்டுப் பன்றி வேட்டை ஆடக்கூடியவராம். இவர் காட்டுப்பன்றிகளை வேட்டையாடிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு பெரிய அளவிலான ராட்சத தவளையை கண்டுபிடித்துள்ளார்.

இந்நிலையில் இந்த தவளையை அவர் தனது கிராம மக்களிடமும், குடும்பத்தினரிடமும் காண்பித்துள்ளார். இந்த தவளையைப் பார்த்து அவரது கிராம மக்கள் மிக ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர். அந்த தவளையை அந்த நபர் கைகளில் தூக்கி வைத்திருக்கும் புகைப்படத்தை பார்த்தல், குழந்தையை தூக்கி வைத்திருப்பது போல இருக்கிறது. அதை விட ஒரு சிறுவன் அந்த தவளையை கையில் தூக்கி வைத்திருக்கும் போது, கிட்டத்தட்ட அந்த சிறுவனது பாதி உயரத்தையும் எடையையும் கொண்டதாக அந்த தவளை இருக்கிறது.

பிறந்த குழந்தையை விடவும் பெரிதாக இருக்கிறது என்றே கூறலாம். அந்த அளவிற்கு இந்த தவளை மிகப்பெரிய அளவில் காணப்படுகிறது. இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும், சின்ன அளவிலான தவளைகளை கண்டாலே கொன்று சாப்பிடக்கூடிய வழக்கமுடைய இந்த கிராம மக்கள் இந்த அபூர்வமான தவளையை சாப்பிடாமல் தங்கள் கிராமத்திலேயே தற்போது உலாவ விட்டுள்ளனராம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்