நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதியானது..!
FSL பரிசோதனையில் நடிகைகள் சஞ்சனா மற்றும் ராகினி போதை மருந்து உட்கொண்டது உறுதி செய்யப்பட்டது.
கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர்கள் சஞ்சனா கல்ராணி, ராகினி திவேதி இவர்கள் போதைப்பொருட்கள் பயன்படுத்தியது மற்றும் போதைப்பொருட்கள் விற்கும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக கடந்த ஆண்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு தற்போது அவர்கள் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.
இந்நிலையில், FSL பரிசோதனையில் நடிகைகள் சஞ்சனா கல்ராணி, ராகினி திவேதி, போதை மருந்து உட்கொண்டது உறுதி செய்யப்பட்டது. அக்டோபர் 2020 இல் ஹைதராபாத்தில் உள்ள FSL பரிசோதனைக்கு நடிகை சஞ்சனா கல்ராணி, ராகினியின் தலை முடியை அனுப்பினார். அதன் முடிவில் இரண்டு நடிகைகளும் போதைப்பொருளை உட்கொண்டது என்பதும் உறுதியானது. இப்போது மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சனா, முடி மாதிரி கொடுக்க மறுத்துவிட்டார். எனவே, மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு சென்றனர். பின்னர், சிசிபி அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் சஞ்சனா முடியைசோதனைக்கு அனுப்பியது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 14 அன்று சிறையில் அடைக்கப்பட்ட நடிகை ராகினி திவேதி 140 நாட்கள் காவலில் இருந்த பிறகு ஜனவரி 21, 2021 அன்று அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டு ஜனவரி 25 அன்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 16 அன்று சிறையில் அடைக்கப்பட்ட சஞ்சனா கல்ராணி, டிசம்பர் 11, 2020 அன்று பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். 56 நாட்கள் சிறையில் இருந்த சஞ்சனா கல்ராணி கடுமையான உடல்நலக்குறைவு காரணமாக நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.