நடிகை யாஷிகா ஆனந்தின் ஓட்டுநர் உரிமம் பறிமுதல்.!

நடிகை யாஷிகா ஆனந்தின் ஓட்டுனர் உரிமத்தை மாமல்லபுரம் போலீசார் பறிமுதல் செய்தனர்.
நடிகை யாஷிகா ஆனந்த் நேற்று முன்தினம் நள்ளிரவு தனது காரில் நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்றார். பார்ட்டிக்கு சென்று திரும்பியபோது, கார் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையோரத்தில் இருந்த தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் பயணித்த யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவணி என்பவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் யாஷிகா மற்றும் இரண்டு ஆண் நண்பர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தில், படுகாயமடைந்த யாஷிகா ஆனந்த் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இடுப்பு எலும்பு, வலது கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், இந்த விபத்து தொடர்பாக மாமல்லபுரம் காவல்துறையினர் நடிகை யாஷிகா ஆனந்த் மீது அதிவேகமாக கார் ஓட்டியது மற்றும் உயிர் சேதம் ஏற்படுத்தியது உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், அதிவேகமாக கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் நடிகை யாஷிகா ஆனந்தின் ஓட்டுனர் உரிமத்தை மாமல்லபுரம் போலீசார் பறிமுதல் செய்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஆனந்த் அம்பானியின் வந்தாரா: வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்து சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய மோடி.!
March 4, 2025
“தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்” வானிலை கொடுத்த சூடான அப்டேட்.!
March 4, 2025