பிரியா பேனர்ஜி தமிழில் சித்திரம் பேசுதடி- 2 , தெலுங்கில் கிஸ், ஜோரு, அசுரா போன்ற திரைப்படங்களில் நடித்து உள்ளார். இவர் தற்போது மும்பையில் உள்ள கர் பகுதியில் வசித்து வருகிறார்.
சமீபத்தில் பிரியா பேனர்ஜி ஆன்லைன் மூலம் மது ஆர்டர் செய்து உள்ளார். பின்னர் ஒரு நபரிடம் இருந்து போன்வந்து உள்ளது. அப்போது பேசிய அவர் மதுக்கு பணம் தர வேண்டும் என்பதால் உங்களின் டெபிட் கார்ட் விவரங்களை சொல்லுங்கள் எனகேட்க , இதையடுத்து தனது டெபிட் கார்ட் விவரங்களை பிரியா பேனர்ஜி கூறியுள்ளார்.
பின்னர் அடுத்த சிறிது நிமிடங்களில் பிரியாவின் கணக்கிலிருந்து ரூ.22,000 எடுத்து உள்ளனர். இதைப்பார்த்து பிரியா அதிர்ச்சி அடைந்த உள்ளார்.பின்னர் மீண்டும் அதே நபர் போன் செய்து உங்கள் கணக்கில் இருந்து அதிகமாக பணம் எடுத்து உள்ளோம். எனவே உங்கள் கூகுள் பே பார்கோடை அனுப்பி அதை ஸ்கேன் செய்யுங்கள் உங்கள் ரூபாய் திரும்பி விடும் என கூறியுள்ளனர்.
அவர் சொன்ன படி பிரியா செய்ய மீண்டும் தனது கணக்கில் இருந்து மேலும் 12 ஆயிரம் பறிகொடுத்தார்.இதனால் அதிர்ச்சியான பிரியாகாவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் பணம் வேறு கணக்குக்கு மாறுவதை தடுத்து நிறுத்திய 2 மணி நேரத்தில் பணத்தை மீட்டு கொடுத்தனர்.
டெல்லி : இந்தியாவின் முக்கிய மாநிலமான மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு யார் ஆள போகிறார்கள்…
இம்பால் : கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி அந்தஸ்து கோரிய மைத்தேயி சமூகத்தினருக்கும் குக்கி பழங்குடியினருக்கும் இடையே…
சென்னை : தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. முதலில்…
தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…