இயக்குனர் எம். சக்தி வேல் இயக்கத்தில் பரத்திற்கு ஜோடியாக நடிகை வாணி போஜன் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
புதுமுக இயக்குனர் எம். சக்தி வேல் என்பவர் இயக்கத்தில் நடிகர் பரத் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை வாணி போஜன் நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் கே எஸ் ரவிக்குமார், துளசி, ராஜ்குமார், போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இந்த திரைப்படத்திற்கான பூஜை இன்று தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் படத்தை பற்றி சக்தி வேல் கூறுகையில் ” இந்த திரைப்படம் விதியசமான கதையை கொண்டதாக இருக்கும். படத்தில் பாடல்கள் இருக்காது. த்ரில்லர் படம் என்று நீங்கள் சொன்னால் அது ஒரு குறிப்பிட்ட ரக ரசிகர்களை குறிக்கும். ஆனால் இது குடும்பங்களையும் ஈர்க்கும் படம். த்ரில்லர் படமாக இருந்தாலும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம்” என்றும் கூறியுள்ளார்.
மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் பரத் இன்ஜினியராக நடிக்கவுள்ளார். மேலும் படத்தில் நடிக்கும் நடிகைகள் மற்றும் படத்திற்கான டைட்டில் குறித்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாணி போஜன் ஏற்கனவே சியான் 60 படத்திலும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…