நடிகை த்ரிஷாவிற்கு கொரோனா தொற்று உறுதி..!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகையான நடிகை த்ரிஷாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், சினிமா பிரபலங்கள் பலரும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், நடிகர்கள் மகேஷ் பாபு, அருண் விஜய், நடிகைகள் மீனா, ஸ்வரா பாஸ்கர் போன்ற பிரபலங்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அந்த வகையில், தமிழ் திரையுலகின் பிரபல நடிகையான நடிகை த்ரிஷாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் தனது சமூக சமூக வலைதளப்பக்கத்தில், ‘அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த போதிலும் புத்தாண்டுக்கு சற்று முன்பு எனக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து அறிகுறிகளும் எனக்கு ஏற்பட்டன. அது எனக்கு மிகவும் அழுத்தம் மிகுந்த வாரமாக இருந்தாலும் தடுப்பூசிகள் காரணமாக இன்று நான் குணமடைந்து வருகிறேன். என்னுடைய பரிசோதனைகளை முடித்து மீண்டும் வீடு திரும்புவேன் என்று நம்புகிறேன். எனக்காக பிரார்த்தனை செய்த என்னுடைய மிகச்சிறந்த குடும்பத்துக்கும் என்னுடைய நண்பர்களுக்கும் என்னுடைய இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
— Trish (@trishtrashers) January 7, 2022
லேட்டஸ்ட் செய்திகள்
மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!
December 18, 2024
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024