குணமடைந்த நடிகை தமன்னா-நன்றி கூற வார்த்தையில்லை-நெகிழ்ச்சி

நடிகை தமன்னா கொரோனாத் தொற்றிலிருந்து மீண்டார்.
நடிகை தமன்னாவிற்கு கொரோனா தொற்று அறிகுறிகளிலுடன் ஐதராபாத்தில் கான்டினன்டல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில்,உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதால் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே தமன்னா தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார். தற்போது அவர் கொரோனாவில் இருந்து முழுவதுமாக குணம் அடைந்து விட்டார்.
இதுகுறித்து நடிகை தமன்னா தனது சமூகவலைத்தள பக்கத்தில் கொரோனாவில் இருந்து முழுவதுமாக குணம் அடைந்து விட்டேன். எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை.
நான் நோயினால் பாதிக்கப்பட்டு மிகவும் சோர்வடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். உரிய சிகிச்சையால் தான் நான் தற்போது நலமாக உள்ளேன். அவர்களின் கனிவான சேவை மற்றும்அக்கறை என்னை குணமடைய வைத்தது என்று கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025