கணவர் நாக சைதன்யாவை விட்டு தான் பிரிவதாக நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா தெலுங்கு திரையுலகிலும் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். இந்நிலையில் தெலுங்கு திரை உலகின் வாரிசு நடிகராகிய நாக சைதன்யாவும் சமந்தாவும் காதலித்து வந்தனர். பின் இரு குடும்பத்தினரின் சம்மதத்தோடு கடந்த 2017 ஆம் ஆண்டு கோலாகலமாக இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
தனது கணவருடன் மகிழ்ச்சியாக இருந்த சமந்தா, திருமணத்திற்கு பின்பதாகவும் தமிழ், தெலுங்கு என இரு மொழி திரைப்படங்களிலும் சமந்தா நடித்து வந்தார். இதற்கிடையில் அவரது கணவருக்கும் சமந்தாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியது.
மேலும் இதை இருவருமே மறுக்கவில்லை. அதே போல அண்மையில் நடைபெற்ற நாக சைதன்யாவின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கூட சமந்தா கலந்து கொள்ளாதது ரசிகர்களை அதிர்சிக்குள்ளாக்கியது. மேலும், ஏற்கனவே பேசப்பட்டு வந்த விவாகரத்து குறித்த செய்தி மேலும் பரவியது. இந்நிலையில் தற்போது நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்களது பிரிவு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், நாங்கள் பல விவாதங்கள் மற்றும் யோசனைக்கு பின்பதாக கணவன் மனைவி எனும் உறவில் நீடிக்கப்போவதில்லை என முடிவு எடுத்திருக்கிறோம். ஆனால், எங்கள் உறவின் முக்கிய அம்சமாக இருந்த நட்பு எங்களுக்குள் முன்பு இருந்தது போல எப்பொழுதும் தொடரும். இந்த கடினமான காலகட்டத்தில் எங்கள் முடிவுகளுக்கு ரசிகர்கள், ஊடகங்கள் ஆதரவு கொடுங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
சென்னை -90 கிட்ஸ்க்கு பிடித்த பெட்டிக்கடை தேன் மிட்டாய் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த செய்தி…
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று (நவம்பர்5)…
திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு…